தலைக்கு வைக்கும் பூ வாடமலிருக்க
குடத்து நீரில் இட்டு வைக்கிறார்கள் உன் தோழிகள்.
கூந்தலில் வைக்கிறாய் நீ !!!!
*
எல்லா மொழியிலும்
எனக்கு காதலை குறிக்கும் ஒரு சொல்
உனது பெயர்
*
நீ பரிசளித்த விலையுயர்ந்த உடையினும்
எனக்கு பிடித்த நிறத்திற்காக நீ செலவழித்த
அந்த மூன்று நாள் தேடலில் ஒளிந்து இருக்கிறது காதல்
*
- அருட்பெருங்கோ
No comments:
Post a Comment