Thursday, February 24, 2011

அவள் பிரிவு உணர்த்தும் சில நிஜங்கள்.....!!!!!

என்றும் சாகாத உன் முத்தம்....

இதயத்தில் நினைவாக நுழைந்து...
கண்களுக்குள் உருவமாய் தோன்றி....
கண்களில் கண்ணீராய் உருவாகி.....
என் கன்னத்தில் நீ இடும் கண்ணீர் முத்தம் இன்னும் இனிக்கத்தான் செய்கிறது....!!!!

***********************************************************************************
காலங்கள் மாற...
கனவுகள மாற...
நாம் ஒன்றாய் வாழ நினைத்த வழிகளும் மாற.....
உன் நினைவுகள் மட்டும்
பிரிந்த பின்பும் மரத்தையே சுற்றும் சருகாய்...
என்னை சுற்றியே...!

***********************************************************************************

உன் நினைவுகளில் நான் உருவமாய் இருந்ததை விட.....
உன் கண்களில் கண்ணீராய் இருந்த நாட்கள் அதிகம்.....
நீ அன்று எனக்காக சிந்திய கண்ணீர் துளிகள் இன்று மறுபிறப்பாய்.....
என் கண்களில் உனக்காக....!!!! உன் பிரிவிற்காக !!

***********************************************************************************
என் கனவுகள் முழுதும் நீ ......
நினைவுகள் முழுதும் நீ......
கனவுகளின் தேவதை நீ......
பூக்களின் புன்னகை நீ.....
மேகத்தின் மென்மை நீ......
குழந்தையின் சிரிப்பு நீ.....
தென்றலின் ஸ்பரிசம் நீ.....
ஓவியத்தின் உயிர் நீ......
கவிதையின் அழகு நீ.....
மல்லிகையின் வாசம் நீ......
என் இதயத்தின் வசமாய் நீ.....
தோழியாய் நீ....காதலியாய் நீ.....

இப்பொழுது என் கண்ணீராய் நீ !!!!!!!!

***********************************************************************************
கனவுகள் நிஜமாவதில்லை...
ஆனால் நிஜங்கள் கனவாகி விட்டன - என் காதல் !

***********************************************************************************
என் கண்ணீரும் தித்திப்புதான்
உனக்காக சிந்தும் போது !!

***********************************************************************************